ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆஜராக உத்தரவு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரன்வீர் ஷா, கிரண் ராவ்
ஆஜராக உத்தரவு

தஞ்சாவூர்: ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோரது மனுக்களை நிராகரித்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவர்கள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டனர்.

சிலை கடத்தல்,ரன்வீர் ஷா,கிரண் ராவ்,ஆஜராக,உத்தரவு



சென்னை, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி, பழமையான கலை பொருட்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய துாண்கள், உலோகம் மற்றும் கற் சிலைகள் என, 267 சிலைகளை கைப்பற்றினர்.


மேலும், சென்னை, போயஸ் கார்டனைச் சேர்ந்த கிரண் ராவ் என்ற பெண் தொழிலதிபர் வீட்டில், 23 கற்சிலைகள்


பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தவை பறிமுதல் செய்யப்பட்டன.


இதையடுத்து, ரன்வீர்ஷா, கிரண் ராவ் மற்றும்அவர்களது ஊழியர்கள் என, மொத்தம், 14 பேருக்கு, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல்தடுப்பு பிரிவு அலுவலகத்தில், நேரில் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது.


நேற்று, கிரண்ராவ், பணியாளர்கள், 11 பேர் சார்பில், வக்கீல்கள் சரவணன், செல்வம் ஆகியோர் ஆஜராகி, 'கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் தொலைவில் உள்ளதால், சென்னையில் விசாரித்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்ய வந்தனர்.


'சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள், கும்பகோணத்தில் உள்ள அலுவலகத்தில் தான் ஆஜராக வேண்டும்' என தெரிவித்த, டி.எஸ்.பி., சுந்தரம்,வக்கீல்களை திருப்பி அனுப்பினார். கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை, சிலை கடத்தல்தடுப்பு பிரிவு அலுவலகமாக மாற்றியுள்ளனர்.

Advertisement

ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு :

சென்னை உயர் நீதிமன்றத்தில், கிரண் ராவ், நேற்று தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: சிலைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு, உரிய ஆவணங்கள் இருப்பதாக, உத்தரவாதம் அளித்ததால் தான், வாங்கினேன். தொலைபேசியில், மிரட்டல் அழைப்பும் வந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரன்வீர் ஷாவும் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளான். இரண்டு மனுக்களும், நீதிபதிகள், ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், 'பழமை வாய்ந்த பொருட்கள் மீதான ஆசையில், 1993ல் இருந்து, சிலைகளை சேகரித்து வைத்துள்ளனர். இதற்கு, சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன' என்றனர். இதையடுத்து, எப்போது, யாரிடம் இருந்து சிலைகள் வாங்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள்,சிலைகள் வைத்திருக்க, பெறப்பட்ட சான்றிதழ்களைதாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-அக்-201822:46:49 IST Report Abuse

தமிழ்வேல் செத்துப் போனவனுவோ அல்லது ஏற்கனவே ஜெயில்ல இருக்கிறவனுவோ பேர்ல தந்த சான்றிதழா இருக்கணும்.

Rate this:
tamil - coonoor,இந்தியா
10-அக்-201809:09:02 IST Report Abuse

tamilஒரு பக்கம் ஒரு சிலர் சிலைகள் கடத்தப்படுவதை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள், மறுபக்கம் இதுபோல ரன்வீர் ஷா, கிரண் ராவ் போன்றோர் வீடுகளில் கொத்து கொத்தாக சிலை கைப்பற்றப்படுகிறது, அக்கறையோடு சிலைகடத்தலை பற்றி பேசியவர்கள் திரு ஹெச்.ராஜா ஏன் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை, இதை பற்றி ஒருவர் கூட வாயே திறக்கவில்லை,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-அக்-201808:33:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaதிருடா... திருடி

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X