'ஸ்கிம்மர்' கருவி விற்ற வாலிபன் பிடிபட்டான்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்கிம்மர்' கருவி விற்ற வாலிபன் பிடிபட்டான்

Added : அக் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை: ஏ.டி.எம்.,களில் வாடிக்கையாளர்களின் விபரங்களை திருட, 'ஸ்கிம்மர்' கருவிகளை தயாரித்து, ஆன்லைனில் விற்பனை செய்து வந்த கோவை நபரை, மும்பை போலீசார் கைது செய்து, அழைத்து சென்றனர்.மும்பையில், ஏ.டி.எம்.,களில், ஸ்கிம்மர் பொருத்தி, நுாதன திருட்டில் ஈடுபட்ட நபரை, அங்குள்ள குற்றப்பிரிவு போலீசார், கைது செய்து விசாரித்தனர். இதில், கோவை, சிங்காநல்லுார் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ், 31, என்பவனிடம், ஸ்கிம்மர் கருவிகளை வாங்கியதாக, வாக்குமூலம் அளித்தான்.நேற்று முன்தினம் இரவு, கோவை வந்த மும்பை போலீசார், ரமேஷை கைது செய்து, அவனது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். இதில், ரமேஷ் வீட்டிலேயே, ஸ்கிம்மர் கருவிகளை தயாரித்து, ஆன்லைனில் விளம்பரம் செய்து விற்பனை செய்தது, கண்டுபிடிக்கப்பட்டது.மும்பையைச் சேர்ந்த மோசடி கும்பல், ரமேஷின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, ஸ்கிம்மர் கருவிகளை பெற்று, அதற்கான பணத்தை, அவனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். இவன் எவ்வளவு ஸ்கிம்மர் கருவிகளை தயாரித்து கொடுத்துள்ளான்; எந்தெந்த வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ளன; வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என, போலீசார் விசாரித்தனர். பின், ரமேஷை, ரயிலில் மும்பை அழைத்து சென்றனர்.நண்பர்களுக்கு, 'பார்ட்டி'சில ஆண்டுகளாக கடும் பணம் கஷ்டத்தில் இருந்த ரமேஷ், ஒன்றரை ஆண்டுகளுக்குள், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டியுள்ளான். அவ்வப்போது, நண்பர்களை வெளியே அழைத்து சென்று, மதுபான, 'பார்ட்டி'யும் வைத்துள்ளான். இதற்கான பணம் குறித்து, நண்பர்கள் கேட்ட போது, பெரிய வியாபாரம் செய்து லாபம் வருவதாக ரமேஷ் சொல்லியுள்ளான். அவனது சுயரூபம் தெரிந்து, நண்பர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X