ஊழல் பட்டியலை கவர்னரிடம் தர தயார் : ராமதாஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் பட்டியலை கவர்னரிடம் தர தயார் : ராமதாஸ்

Added : அக் 10, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 ஊழல் பட்டியலை கவர்னரிடம் தர தயார் : ராமதாஸ்

சென்னை: 'தமிழகத்தில் உள்ள, 21 பல்கல்கலைகளில் நடந்த ஊழல் பட்டியல்களை, கவர்னரிடம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையில் நடந்த உயர்கல்வி குறித்த கருத்தரங்கில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், 'தமிழகத்தில், துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை, கவர்னராக பதவியேற்ற பின், அறிந்து கொண்டேன். ஆரம்பத்தில், இதை நான் நம்பவில்லை; பின், அது உறுதியானவுடன், நான் மிகவும் வருத்தமடைந்தேன்' என்றார்.ஆனால், அதுகுறித்து நேற்று முன்தினம், கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக, நான் நேரடியாக கூறவில்லை; கல்வியாளர்கள் கூறியதைத்தான் கூறினேன்' என, விளக்கமளித்து, இச்சிக்கலில் இருந்து விலகியுள்ளார்.தமிழகத்தில், மொத்தமுள்ள, 21 பல்கலைகளிலும் நடந்த ஊழல்களை, பா.ம.க., விரிவாக தொகுத்திருக்கிறது. கவர்னர் அழைத்தால், எந்த நேரமும், அந்த ஊழல் பட்டியலை, கவர்னரிடமும் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் கவர்னராக இருந்தால், அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X