வைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (51)
Advertisement
  வைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார்

சென்னை : வைரமுத்து தன்னை 'அழைத்தார்' என்று பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியுள்ளார். பெண்கள் வேலைபார்க்கும் இடங்களில் ஆண்களால் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை பதிவிடுவதற்காக, டுவிட்டரில் #MeToo என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது.வெளிநாடுகளில் துவங்கிய இத்தகைய பதிவுகள், இப்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே பாடகி சின்மயி, தன் டுவிட்டர் பக்கத்தில் சில பெண்கள் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பகிர்ந்திருந்தார்.அதில் 2005 அல்லது 2006ல் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபின் என்னையும், தாயையும் மட்டும் காத்திருக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கூறினர்.பின் வைரமுத்து இருக்கும் ஓட்டல் அறைக்கு செல்லுமாறு என்னை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கேட்டுக்கொண்டார். எதற்கு நான் வைரமுத்து அறைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டபோது ஒத்துழைப்பு கொடுக்குமாறு அவர் கூறினார். ஒத்துழைக்க மறுத்தால் சினிமா துறையில் எதிர்காலம் இருக்காது என்றும் மிரட்டினார். அதனை ஏற்க மறுத்த நானும், தாயும் எங்களுக்கு எதுவும் முக்கியம் இல்லை என்று கூறிவிட்டு நாடு திரும்பிவிட்டோம்,என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் என்ன நடந்தது என்பது குறித்து தாய் பத்மாஷினியும் விளக்கம் கமளித்துள்ளார்.
வைரமுத்து பதில் : சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்பொழுது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன் அவற்றும் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை ; உண்மையை காலம் சொல்லும் என தெரிவித்திருந்தார். வைரமுத்துவின் டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு, அவர் ஒரு பொய்யர் என சின்மயி டுவிட்டரில் பதிலளித்தார். திருமணத்திற்கு அழைப்பு : இதைத்தொடர்ந்து சின்மயி, வைரமுத்துவை தனது திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என சமூகவலைதளங்கல் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இந்த படத்தையும் பலர் பகிந்தனர்.
இதற்கு டுவிட்டரில் பதிலளித்த சின்மயி, இதுபற்றி அப்போது கணவர் ராகுலிடம் , அவரது குடும்பத்தினரிடமும் சொல்லவில்லை. பின் தான் கூறினேன். ஆனால் அவர்கள் என்மீது வைத்திருந்த அன்பு குறையவில்லை. அனைத்து திரைத்துறை நிபுணர்களையும் அழைத்திருந்தததால், வைரமுத்து மற்றும் அவரது குடும்பத்தையும் அழைக்க நேரிட்டது எவ பதிலளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Usuf Ali - Chennai,இந்தியா
16-அக்-201808:54:38 IST Report Abuse
Usuf Ali சின்மயி ... வைரமுத்து பிரச்சினை ..... காலம் கடந்து சொல்வது சரியா, கோர்ட்டில் நிரூபிக்க முடியுமா .. சின்மயி கோர்ட்டில் வழக்கு பதியு செய்ய வேண்டும் உடனடியாக
Rate this:
Share this comment
Vijaya Raghav - chennai,இந்தியா
17-அக்-201810:14:37 IST Report Abuse
Vijaya Raghavஏன்டா லூசு இவன் கூப்பிடுவான் என்று தெரிந்திருந்தால் இவள் வீடியோ காமெராவை எடுத்துக்கொண்டு போயிருப்பாள் இதை எப்படி நிரூபிக்க முடியும் உனக்கு அக்கா தங்கை இருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்பாயா...
Rate this:
Share this comment
Cancel
Natrajan Natarajan - Rasipuram,இந்தியா
16-அக்-201807:16:09 IST Report Abuse
Natrajan Natarajan எத்தனைஆண்டுகளுக்குப்பின் நான் வைரமுத்துவால் கற்பலிக்கப்பட்டேன் என்று சின்மயிகூறுவதுஇது சின்மயாவுக்கு ஒரு விளம்பரமாகஇருக்கலாம்.ஆனால் தமிழினத்துக்குஇது ஒரு மாபெரும் இழுக்கு. நான் அவனது படுக்கையை பகிர்ந்துகொண்டேன் என்று நா கூசாமல் சொல்கிறாளே இவளையெல்லாம் என்னவென்று சொல்வது.
Rate this:
Share this comment
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
17-அக்-201805:29:12 IST Report Abuse
Varatharaajan Rangaswamy'படுக்கையை பகிர்ந்துகொண்டேன்' என்று சின்மயி கூறவில்லை 'படுக்கைக்கு அழைத்தார்' என்றுதான் கூறியுள்ளார் இந்த விஷயத்தில் வைரமுத்து பக்கம் நியாயம் இருந்தால் மான நஷ்ட வழக்குப் போடலாமே? சின்மயி திருமணத்திற்கு ஏன் வைரமுத்துவை அழைத்தார் என்பதையும் காலம் கடந்து இந்த விஷயங்களை சொல்வதற்கும் சின்மயி கூறியுள்ள காரங்கங்கள் மிகவும் நியாயமானவையே கஞ்சா கவிஞரை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
15-அக்-201818:24:37 IST Report Abuse
ravichandran யப்பா இந்த ஆளு சேர்ந்து இருந்த இடம் அப்பிடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X