Catholic Federation Of India Threaten To Take Legal Action Against Nuns, Says ' They Are Embarrassing Church' | பாதிரியாருக்கு எதிராக போராட்டம்: கன்னியாஸ்திரிகளுக்கு மிரட்டல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாதிரியாருக்கு எதிராக போராட்டம்: கன்னியாஸ்திரிகளுக்கு மிரட்டல்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாதிரியார் பிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி, குருவிலாங்காடு சர்ச் ,பலாத்கார பாதிரியார் பிராங்கோ ,   பிஷப் பிரான்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் , கன்னியாஸ்திரிகள் போராட்டம், பாதிரியார் ,பிராங்கோ முல்லக்கல், 
Priest Franco Mullakkal, Kanniyastri,  priest Franco,  Guru Vallikadu Church, Bishop Franco Mullakkal, Kanniyasthiri rape, 
Nuns protest, priest, Franco Mullakkal,

திருவனந்தபுரம்: பலாத்கார பாதிரியார் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு, குருவிலாங்காடு சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற தவறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், குருவிலாங்காடு சர்ச் நிர்வாக கட்டடத்தில் தங்கியுள்ளனர்.


வெளியேற உத்தரவு:இந்நிலையில், செங்கணச்சேரியில் இருந்து செயல்படும், இந்திய கத்தோலிக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: சர்ச் கட்டடத்தில் தங்கி கொண்டு, சர்ச் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும். தவறினால், கூட்டமைப்பு சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். அவர்கள் அங்கிருந்து வெளியேறக்கோரி போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arun veli - chennai,இந்தியா
11-அக்-201820:43:49 IST Report Abuse
arun veli பாதர் , பாதர் னு சொல்லிட்டு அந்த பெயரை காப்பாத்துவதற்கு ஏதும் குடுக்கவிட்டால் , அவர் என்ன செய்வார் பாவம்..? அதான் அவரே தேடிக்கிட்டார்... அதுவும் தப்புன்னா என்னய்யா பண்றது....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-அக்-201819:42:32 IST Report Abuse
Pasupathi Subbian அதானே சேவை செய்ய மறுத்தால் , சவ்கரியங்களை துறக்கவேண்டியது அவசியம்
Rate this:
Share this comment
Cancel
Asvin Raj - Periyakulam,இந்தியா
11-அக்-201819:25:28 IST Report Abuse
Asvin Raj சர்ச்சில் எல்லா தீய செயல்களும் நடக்கிறது . அதனால் தான் கோயில்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் . குடித்து விட்டு கும்மாளம் அடித்தல் , பாலியல் விளையாட்டுகள் , சீட்டாட்டம் ,மற்றும் ஒழுக்கக்கேடான அணைத்து செயல்களும் நடக்கிறது . பணம் இங்க முக்கியமாக விளையாடுகின்ற்து . அன்பு ,கருணை ,இரக்கம் ,ஏழை, எளியர்களுக்கு உதவி புரிதல் ,எளிமையாக வாழ்வது ,இறைப்பற்று , ஏசுவின் போதனைகளை கற்பித்தல் போன்ற நல்ல செயல்கள் இங்கு பெரும்பாலான சர்ச்சுகளில் நடைபெறுவதில்லை . கிருஸ்த்துவ மக்களும் காணிக்கை என்ற பெயரில் பாதிரியாருக்கு பணத்தை கொடுத்து அவர்களின் ஏமாற்று வேலைகளில் மயங்கி அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு விட்டுவிடுகின்றனர் .கோவிலுக்கு செல்வதை விட உங்கள் உள்ளத்தில் இறைவனை நினைத்து செபம் செய்ங்கள். பசித்தோர்க்கு உணவளியுங்கள் ,ஏழை ,எளியவர்களுக்கு உதவுங்கள்,நல்லஒழுக்கங்களை முடிந்தவரை பின் பற்றுங்கள் பாதிரியார் ,சிஸ்டர் கலை நோக்கி போகாதீர்கள் , ஏனெனில் ஏசு பாதிரியர்களை பற்றி அக்காலத்தில் கூறிஉள்ளார் . பார்வைக்கோ நீண்ட அங்கியை போர்த்தியிருப்பார்கள் ஆனால் நல்லதை ஏதையும் அவர்கள் செய்யமாட்டார்கள் .மக்கள் மேல் அவற்றினை சுமத்துவார்கள் ஆனால் இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார் . எனவே இவர்களை போன்றவர்களை நாம் புறம் தள்ளினால் இப்படி பட்டோர் யாரும் இனிமேல் உருவாக மாட்டர்கள் .உண்மை என்றுமே கசக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X