தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தீபாவளி, சிறப்பு பஸ்கள், விஜயபாஸ்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.,3,4,5 தேதிகளில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து 11,367 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பஸ்களும் இயக்கப்படும். முன்பதிவு நவ.,1 முதல் துவங்கும். கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படும். தாம்பரம்,கே.கே.நகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து பஸ்கள் கிளம்பும்.

ஆந்திரா மார்க்கம் செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும், புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சைதாப்பேட்டையில் இருந்தும், தென் மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும் கிளம்பும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு இடங்களில் இருந்து பஸ்கள் கிளம்பும். பண்டிகை முடிந்து ஊர் திரும்ப 12 ஆயிரம் பஸகள் இயக்கப்படும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
12-அக்-201807:48:24 IST Report Abuse
அம்பி ஐயர் போன வருஷமே எல்லா பஸ்சும் ஈ ஓட்டிக்கிட்டுப் போனாங்க.... மட்டமான பேருந்துகள் மற்றும் அநியாயக் கட்டணக் கொள்ளைகள்.... இந்த வருஷமும் அப்படியே.... அது சரிங்க.... ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய பி.எஃப் பணம்.... ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட்... எல்லாம் கொடுத்தாச்சா....???
Rate this:
Share this comment
Cancel
sasikumar -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201819:36:31 IST Report Abuse
sasikumar அந்த வேலைநிறுத்தம் என்ன ஆச்சுங்க காயா பழமா
Rate this:
Share this comment
Cancel
Balachandran Rajagopal - CHENNAI,இந்தியா
11-அக்-201818:24:54 IST Report Abuse
Balachandran Rajagopal முதலில் பழய பேருந்தை சரி செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X