கங்கைக்காக போராடிய ஆர்வலர் காலமானார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கங்கைக்காக போராடிய ஆர்வலர் காலமானார்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கங்கை நதி, சமூக ஆர்வலர், ஜிடி அகர்வால்,

புதுடில்லி: கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.

கங்கை நதியை தூய்மைபடுத்த வேண்டும் எனக்கூறி, அகர்வால், ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். போராட்டம் 109 நாட்களை கடந்த நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போராட்ட காலத்தில், தேன் கலந்த தண்ணீரை அருந்தி வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் அருந்துவதையும் கைவிட்டார். இன்று(அக்.,11) மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது.
ஜிடி அகர்வால், சுவாமி ஞானஸ்வரூப் சனாந்த் என்றும் அழைக்கப்பட்டார். ஐஐடி பேராசிரியராக பணியாற்றிய அவர், நதிகளுக்காக பல போராட்டம் நடத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanthuji -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201819:59:11 IST Report Abuse
nanthuji ॐ.. தன் வாழ்வின் இறுதி நாட்களில் கூட, தளராமல் போராடி, கங்கை அன்னையின் பாதங்களில் சரணடைந்த, அய்யாவின் ஆத்மா சாந்தி பெறட்டும்.. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
11-அக்-201819:50:30 IST Report Abuse
Sudarsanr அன்னாரின் ஆத்மா ஷாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..ஓம் ஷாந்தி...
Rate this:
Share this comment
Cancel
11-அக்-201818:31:07 IST Report Abuse
கோகுல்,மதுரை ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X