லஞ்சம் வாங்கிய முன்னாள் வி.ஏ.ஓ., வுக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய முன்னாள் வி.ஏ.ஓ., வுக்கு சிறை

Added : அக் 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வசிக்கும் முகமது சலீம் என்பவர் தனது தந்தையின் பேரிலுள்ள இடத்தை தன் பெயருக்கு மாற்ற அதே பகுதியைச் சேர்ந்த பாடாலூர் வி.ஏ.ஓ., மணியை அனுகியுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ., முகமது சலீமிடம் ரூ 600 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது சலீம் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து 2008 ம் வருடம் ஏப்ரல் 30ம் தேதி வி.ஏ.ஓ.,விடம் சலீம் லஞ்சப் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த போலீசார் வி.ஏ.ஓ.,வை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து பெரம்பலூர் தலைமை குற்றவியல் கோர்டில் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்கு நீதிபதி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
12-அக்-201807:43:26 IST Report Abuse
அம்பி ஐயர் இது தண்டணை மாதிரி தெரியவில்லையே... இரண்டாயிரம் அபராதம் என்பது சிறிய தொகை.... அவர் வேலை பார்த்து ஓய்வும் பெற்று ஓய்வூதியமும் பெற்று வருவார்.... அந்தப் பணப்பலன்கள் அனைத்தையும் அல்லவா ரத்து செய்ய வேண்டும்....???
Rate this:
Share this comment
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
12-அக்-201807:25:30 IST Report Abuse
R KUMAR பணி ஒய்வு பெற்று அநேகமாக ஓய்வுகால பலன்களை பெற்றிருப்பார். 2008 ல் பிடிபட்ட நபருக்கு 2018 ல் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இவர் ஏன் மேல் முறையீடு செய்யக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel
Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா
12-அக்-201807:07:11 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai லஞ்சம் பெற்ற விஏஓ தண்டிப்பது மிகவும் அவசியமே ஆனால் லஞ்சமே அரசாள்வது தண்டனைக்குரியதில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X