தொடர்ந்து 5 மணி நேரம் 'தினமலர்' வாசித்து சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து 5 மணி நேரம் 'தினமலர்' வாசித்து சாதனை

Added : அக் 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாணவி, 'தினமலர்' நாளிதழை, தொடர்ந்து, ஐந்து மணி நேரம் சத்தமாக வாசித்து, சாதனை படைத்தார்.

'முகவை ரெக்கார்ட்ஸ், வில்ஸ் மாநில சாதனையாளர்' பட்டியலுக்காக, தொடர்ந்து, ஐந்து மணி நேரம் சத்தமாக நாளிதழ் வாசிக்கும் சாதனை நிகழ்ச்சி, ராமநாதபுரம் அருகே, ஆர்.கே. சாமி கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.

வில்ஸ் ரெக்கார்டு நிறுவன தலைவர் கலைவாணி, செயலர் தஹ்மிதாபானு, கல்லுாரி பேராசிரியர்கள் முன்னிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நேற்றைய, 'தினமலர்' நாளிதழ் செய்திகளை, இக்கல்லுாரி மாணவி, எம்.ஷாலினி, 19, இடைவேளை இன்றி, மாலை, 4:00 மணி வரை, தொடர்ந்து, ஐந்து மணி நேரம் வாசித்து சாதனை படைத்தார்.

வில்ஸ் நிறுவனர் தலைவர் கலைவாணி கூறுகையில், ''இளைஞர்களிடையே நாளிதழ் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் தவறான செய்திகளை நம்பி விடுகின்றனர். இதை தவிர்க்கவும், நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு முன், யாரும் இதுபோல், ஐந்து மணி நேரம், சத்தமாக நாளிதழ் வாசித்த சாதனை இல்லை,'' என்றார்.

மாணவி ஷாலினி, ''இரண்டாண்டுகளாக முயற்சி செய்தேன். 'தினமலர்' செய்திகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருப்பதோடு, படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும். மற்ற பத்திரிகைகளில் இருந்து, வித்தியாசமான செய்திகள் இடம்பெற்றிருக்கும் என்பதால், என் சாதனை நிகழ்ச்சிக்கு, 'தினமலர்' நாளிதழை பயன்படுத்தினேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
12-அக்-201811:05:33 IST Report Abuse
sahayadhas சமீபத்தில் சாதனைகள் அதிகம் தான்.
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201808:09:54 IST Report Abuse
ருத்ரா தினமலரில் நம்பிக்கை தரும் செய்திகள் நிகழ்வுகள் இருப்பதால் பலரும் சாதிக்க முடியும். சாதனை படைத்த மாணவிக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X