25 ஆண்டுகளானநீர் மின் நிலையங்கள் புனரமைக்கும் பணியில் வாரியம் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

25 ஆண்டுகளானநீர் மின் நிலையங்கள் புனரமைக்கும் பணியில் வாரியம் தீவிரம்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, 25 ஆண்டுகளை கடந்த, 11 நீர் மின் நிலையங்களில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, மின் வாரியம், தீவிரம் காட்டி வருகிறது.
நீலகிரி, கோவை, ஈரோடு, நெல்லை மாவட்டங்களின், மலை பகுதிகளில், மின் வாரியத்திற்கு, 2,307 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, 50 காசுக்கு கீழ் உள்ளது. பெரும்பாலான, நீர் மின் நிலையங்கள் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாகின்றன.


தீவிரம்



இதனால், அவற்றில் முழு அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, 25 ஆண்டுகளான, நீர் மின் நிலையங்களில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு, மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், சுற்றுச்சூழலை பாதிக்காத, காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்சாரத்தின் பங்கை அதிகரிக்குமாறு தெரிவித்து உள்ளது. அதில், நீர் மின் நிலையங்கள் மட்டுமே, மின் வாரியத்திற்கு சொந்தமானவை. அவை துவக்கப் பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாவதால், பல நீர் மின் நிலையங்களில், அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப, மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இதனால், 25 ஆண்டுகளை கடந்த, நீர் மின் நிலையங்களில், நவீனமயமாக்கல் மற்றும் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேனி மாவட்டம், கூடலுர் அருகே, தலா, 35 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய, பெரியாறு நீர் மின் நிலையம் உள்ளது. இது, 1959ல் துவக்கப்பட்டது.தற்போது, நான்கு அலகு களின் உற்பத்தித் திறனும், 42 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், கோவை நீர் மின் உற்பத்தி வட்டத்தில் உள்ள, சோலையாறு மின் நிலையத்தின், இரு அலகுகளின் உற்பத்தித் திறனும், தலா, 35 மெகா வாட்டில் இருந்து, 42 மெகா வாட்டாக உயர்த்தும் பணி நடக்கிறது.


டெண்டர்



நீலகிரியில் உள்ள, மோயார் மின் நிலையத்தின், மூன்று அலகுகளின் திறனையும், தலா, 12 மெகா வாட்டில் இருந்து, 14 மெகா வாட்டாக உயர்த்த, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, சமீபத்தில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, 60 மெகா வாட் திறனில், கோதையாறு, 1 என்ற பெயரில், நீர் மின் நிலையம் உள்ளது. கடந்த, 1970ல் துவங்கப்பட்ட, அந்த மின் நிலையத்தின் உற்பத்தித் திறன், தற்போது, 70 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட உள்ளது. இதே போல், பழமையான மின் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தீவிர ஆய்வு!



அடர்ந்த வன பகுதியில் உள்ள, நீர் மின் நிலையங்களில், புனரமைப்பு பணிக்காக, பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அங்கு, மின் ஊழியர்களை தவிர்த்து, யாரும் செல்ல முடியாது. இதனால், புனரமைப்பு பணியில், தரமான உபகரணங்கள், சந்தை விலைக்கு வாங்கப்படுகிறதா, திட்டமிட்டபடி பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை, வாரிய உயரதிகாரிகள், தனி குழு அமைத்து, தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X