பழைய பஸ் நிலையத்தில் நகர சபை கட்டடம் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பழைய பஸ் நிலையத்தில் நகர சபை கட்டடம் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பழைய பஸ் நிலையத்தில் நகர சபை கட்டடம் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுச்சேரி:புதுச்சேரி பா.ஜ., நகர மாவட்ட செயற்குழு கூட்டம், வாழைக்குளம் சமுதாய நலக்கூட்டத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி வரவேற்றார். தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், செல்வகணபதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில துணை தலைவர்கள் செல்வம், துரை கணேசன் கலந்து கொண்டனர்.புதுச்சேரி நகரசபை கட்டடம் அனைத்து நிர்வாக வசதிகளுடன், பழைய பஸ் நிலைய இடத்தில், கட்டி முடிக்க வேண்டும். கடற்கரை மணல் திட்டில் போலீஸ் கண்காணிப்பு பூத் அமைக்க வேண்டும். 100 அடி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால பணியை முழுமையாக முடிக்க வேண்டும். உப்பனாறு கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடித்து, குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரை மணல் திட்டில், 24 மணி நேரம் காவல் கண்காணிப்பு பூத் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொறுப்பாளர்கள் நாகராஜன், ரவிஅண்ணாமலை, மாவட்ட துணை தலைவர்கள் ஜெயக்குமார், கார்த்திகேயன், கலாவதி, மாலதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X