உடல் உழைப்போர் சங்கம் சட்டசபை நோக்கி பேரணி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

உடல் உழைப்போர் சங்கம் சட்டசபை நோக்கி பேரணி

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 உடல் உழைப்போர் சங்கம் சட்டசபை நோக்கி பேரணி

புதுச்சேரி:அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரி, சி.ஐ.டி.யூ., உடல் உழைப்போர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தி, ரூ. 20 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வழங்கப்படாமல் உள்ள இறப்பு உதவித்தொகையை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களை சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., புதுச்சேரி பிரதேச உடல் உழைப்போர் சங்கம் சார்பில், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணி நடந்தது. பேரணிக்கு சங்க தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, கவுரவத்தலைவர் முருகன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X