பழைய வி.ஏ.ஓ., அலுவலகம் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பழைய வி.ஏ.ஓ., அலுவலகம் அகற்றம்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கனுார்:கூனிச்சம்பட்டில் சேதமடைந்திருந்த பழைய கிராம நிர்வாக அதிகாரி அலுவலக கட்டடம், தினமலர் செய்தி எதிரொலியால், இடித்து அகற்றப்பட்டது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மெயின் ரோடு, பெருமாள் கோவில் சந்திப்பு சாலை ஓரத்தில் ஓடுகளால் அமைக்கப்பட்ட கட்டடத்தில், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு, பொதுமக்கள் ஜாதி, குடியிருப்பு உள்ளிட்ட வருவாய் சான்றிதழ் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற சான்றிதழ் பெற்று வந்தனர். இந்நிலையில், இக்கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, அதன் அருகே புதிதாக கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால், சேதமடைந்துள்ள பழைய கிராம நிர்வாக அலுவலகம் எந்நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலை இருந்தது. விபத்து ஏற்படும் முன், கட்டடத்தை அகற்ற வேண்டுமென தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சேதமடைந்திருந்த பழைய கிராம நிர்வாக அதிகாரி அலுவலக கட்டடம் பொதுப்பணித்துறை மூலம், பொக்லைன் இயந்திரம் கொண்டு, இடித்து அகற்றப்பட்டுள்ளது. கட்டடம் அகற்றப்பட்ட இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X