புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்

முதல்வர் நாராயணசாமி பெருமிதம்

புதுச்சேரி:புதுச்சேரியில், பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்த சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:புதுச்சேரியில் கவர்னர், டி.ஐ.ஜி., அரசு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பெண்கள் உள்ளனர். உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை. ஆனால், புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதுடன், ஆண்களை விட உரிமைகள் அதிகம் தரப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பெண்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தினாலேயே நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தனர். உள்ளாட்சிகளில் வழங்கப்படுவதைப்போல் சட்டசபை மற்றும் லோக்சபாவில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காங்., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதா, பாராளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.பெண்கள் தற்போது நன்றாக கல்வி கற்கின்றனர். கல்லுாரி பட்டமளிப்பு விழாவிற்கு செல்லும்போது தங்கம், வெள்ளி பதக்கங்களை பெண்கள்தான் பெறுகின்றனர். ஆனால், பெற்றோர் பெண் பிள்ளைகளை ஆண்களுக்கு சமமாக நடத்துவதில்லை. பெண் பிள்ளைகள் திருமணம் ஆனவுடன் சென்று விடுவர் என்று நினைக்கின்றனர். ஆனால், ஆண்கள்தான் திருமணம் ஆன மூன்றாவது மாதத்திலேயே, பெற்றோரை தவிக்கவிட்டு, மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர்.பெண் பிள்ளைகள் திருமணம் ஆகி சென்றாலும், பெற்றோரை கவனிக்கின்றனர். எனவே பெண் பிள்ளைகளை சமமாக பாவிக்க வேண்டும். நாட்டில் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரத்தால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதை தடுக்க கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு சமமாக பெண் பிள்ளைகளை நடத்த, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X