பெண்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை கவர்னர் கிரண்பேடி பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை கவர்னர் கிரண்பேடி பேச்சு

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுச்சேரி:நாம் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என, பெண்கள் கூறிக்கொள்ளும் காலம் விரைவில் வரும் என, கவர்னர் கிரண்பேடி பேசினார்.புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்த பெண் குழந்தைகள் தின விழாவில் அவர் பேசியது:ஆண், பெண்கள் இருவருமே சமம்தான். பெண்கள் வலிமையற்றவர்கள் என்று நினைத்தால் வலிமையற்றவர்கள் தான். பெண் குழந்தைகளிடம், நீ எதற்கும் குறைந்தவள் அல்ல என பெற்றோர் கூறினால், அவர்கள் வலிமையுடையவர்களாக வளர தொடங்குவர்.குழந்தைகளிடம் உறவினர்களும், பெற்றோர்களும் எந்த விதத்தில் பேசுகிறார்களோ, அது குழந்தைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என்று, நீங்களே கூறிக்கொள்ளும் காலம் விரைவில் வரும்.பெற்றோர், பள்ளியில் கூறும் அறிவுரைகளின்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கடின உழைப்பு, சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கடின உழைப்பு, ஒழுக்கம் இல்லாமல் உயர வேண்டும் என, இளைஞர்கள் நினைக்கின்றனர். கல்விக்கடன் பெறும் பலரும், வேலை கிடைத்த பிறகும் கடனை திருப்பி செலுத்துவதில்லை. இதனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கடன் தர முடியாத சூழல் ஏற்படுகிறது. நமக்கு நாமே உண்மையாக இருந்தால், இந்த நிலை ஏற்படாது.பணம் முக்கியம் கிடையாது. நன்றாக படியுங்கள், இணைய தளம் மூலம் அதிகம் படிக்கலாம். மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். நம்மால் நினைத்ததை அடைய முடியவில்லை என்றால், அதற்கு யாரும் காரணமில்லை. விதைத்தவன்தான் அறுப்பான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்படி இருப்போம் என்பது நம்மை பொறுத்தே அமையும். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X