கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா பென்ஷனர்கள் சங்கம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா பென்ஷனர்கள் சங்கம் அறிவிப்பு

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுச்சேரி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்த உள்ளதாக, புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் தலைவர் பாலமோகனன் கூறியதாவது:புதுச்சேரி அரசு பென்ஷனர்களுக்கு, மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், உள்ளாட்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் மருத்துவப்படியை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய பென்ஷன் அமைச்சகத்தின், கடந்த மே 12ம் தேதியிட்ட ஆணையின்படி, பென்ஷன் தொகையை மறுநிர்ணயம் செய்து, உயர்த்தி அளிக்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு நிலுவையையும், பஞ்சப்படி நிலுவையையும் தாமதமின்றி தர வேண்டும். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பென்ஷனர்களுக்கான அமலாக்க ஆணையை, 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசில் பென்ஷன் பெறும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதுடன், பென்ஷனர்களின் குறைகளை தீர்ப்பதற்கு, 'பென்ஷன் அதாலத்' நிகழ்ச்சியை, அனைத்து துறைகளிலும் 6 மாதத்துக்கு ஒருமுறை நடத்த வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, 15ம் தேதியன்று, காலை முதல் மதியம் வரை, தலைமை தபால் நிலையம் எதிரில் தர்ணா நடத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். சங்கத்தின் துணைத் தலைவர் சண்முகம், செயலாளர் நடராஜன், துணை செயலாளர் அசோகன், நமச்சிவாயம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X