புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை

புதுச்சேரி:ஜிப்மரில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று புதுச்சேரி வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 10.25 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறார்.அங்கு அவரை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் வளாகத்திற்கு செல்கிறார் அங்கு ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.பட்டமளிப்பு விழா முடிந்து மதியம் 12.15 மணியளவில் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரி நகர பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லை பகுதியில், சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெறுகிறது.பட்டமளிப்பு விழா நடைபெறும் ஜிப்மர் கலையரங்கம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு 25 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாதுகாப்பு கருதி கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X