புதுச்சேரி விமான பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி விமான பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை காரணமாக, விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மூன்று மணி நேரத்திற்கு முன்பாக, விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு இன்று காலை 10.20 மணிக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். விழா முடிந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், மூன்று மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வரவேண்டும் என தகவல் அனுப்பப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து 70 பயணிகளுடன் காலை 11.20 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் ஸ்பைஜெட் விமானம், 11.45 மணிக்கு 67 பயணிகளுடன் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு செல்கிறது.அதனை தொடர்ந்து 70 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து 12.30 மணிக்கு புதுச்சேரி வரும் ஸ்பைஜெட் விமானம் 12.50 மணிக்கு 46 பயணிகளுடன் பெங்களூருக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்கிறது.இந்த பயண நேரத்தில் எவ்வித மாறுதலும் இல்லை வழக்கம்போல் விமானம் இயங்கும் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X