விடுதி மற்றும் பள்ளி கட்டடங்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடுதி மற்றும் பள்ளி கட்டடங்கள் திறப்பு

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான, பத்து விடுதி கட்டடங்கள் மற்றும் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார்; ராமநாதபுரம் மாவட்டம், நீராவி உள்ளிட்ட இடங்களில், 11.34 கோடி ரூபாய் செலவில், மாணவ - மாணவியருக்கான விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரியலுார் மாவட்டம், வெத்தியார்வெட்டு; திருவாரூர் மாவட்டம், அபிஷேக கட்டளை; காஞ்சிபுரம் மாவட்டம், தைய்யூர், மீனம்பாக்கம், அனகாபுத்துார்; சேலம் மாவட்டம், சிக்கனம்பட்டியில் 4.32 கோடி ரூபாய் செலவில், கூடுதல் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இவை அனைத்தையும், முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


திறன்மிகு மையம் திறப்பு!



காஞ்சிபுரம் மாவட்டம், குரோம்பேட்டை, அண்ணா பல்கலை, எம்.ஐ.டி., வளாகத்தில், பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, உலக தரத்தில், உயர் தொழில்நுட்ப பயிற்சி வழங்க, 547 கோடி ரூபாய் செலவில், திறன்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அத்துடன், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள, அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிகள், வேலுார், பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, தரமணி, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி, ஆவடி, முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள, தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும், முதல்வர் திறந்து வைத்தார்.இம்மையங்களில், படிக்கும் மாணவ, மாணவியருக்கும், பிற கல்லுாரி மாணவ, மாணவியருக்கும், உயர்மட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, 'சிமென்ஸ்' நிறுவனம் சார்பில், உலக தரத்திலான பயிற்சி கருவிகள், இயந்திரங்கள், தளவாடங்கள், இம்மையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், பன்னாட்டு நிறுவனங்களில், வேலைவாய்ப்பும் பெற இயலும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X