ராணுவ வீரர் உடல் அடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் உடல் அடக்கம்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ராணுவ வீரர் உடல் அடக்கம்

நாகர்கோவில்:பஞ்சாப் மாநிலத்தில், நக்சல்கள் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் பலியான, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் நேற்று, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
குமரி மாவட்டம், பருத்திக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் ஜெகன், 39. இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 8ம் தேதி, பஞ்சாபில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெகன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியானார்.ஜெகன் உடல், டில்லியில் இருந்து, விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தது. அங்கிருந்து, சொந்த ஊரான, பருத்திகாட்டுவிளைக்கு வந்தது. உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு, நேற்று காலை, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஜெகனின் மனைவி சுபி, தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
12-அக்-201807:53:12 IST Report Abuse
Giridharan S இந்த வீரருக்கு எனது வீர வணக்கங்கள். வீர மரணம் அடைந்த இந்த மா வீரரின் புகழ் அவர் வாழ்ந்த ஊரில் என்றென்றும் பறக்கட்டும். அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தார்க்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசு அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்கவும் அவரின் மனைவிக்கு தாமதமின்றி அரசு வேலை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
p.selvin - knyakumari,இந்தியா
12-அக்-201817:13:10 IST Report Abuse
p.selvinஇந்த வீரருக்கு எனது வீர வணக்கங்கள். வீர மரணம் அடைந்த இந்த மா வீரரின் புகழ் அவர் வாழ்ந்த ஊரில் என்றென்றும் பறக்கட்டும். அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தார்க்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசு அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்கவும் அவரின் மனைவிக்கு தாமதமின்றி அரசு வேலை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X