டெங்கு: தலைமை செயலர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு: தலைமை செயலர் ஆலோசனை

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து, தலைமை செயலகத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில், 2017ல், டெங்கு காய்ச்சலால், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்; 65 பேர் உயிரிழந்தனர். அதேபோல, பன்றி காய்ச்சலில், 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். காய்ச்சலால், அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்களில், தமிழகம் முன்னிலை பெற்றது. நடப்பாண்டில், டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த, தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சில நாட்களாக, டெங்கு அறிகுறியுடன், மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை, தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பாதிப்பு அதிகமாக உள்ளது.இதையடுத்து, டெங்கு தடுப்பு தொடர்பாக, தலைமை செயலகத்தில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில், நேற்று ஆலோசனை நடந்தது. சுகாதாரத்துறை துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி, வருவாய்த்துறை உட்பட, பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், பரவலாக மழை பெய்தது. மழை நின்ற சில நாட்களில், டெங்கு காய்ச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.வீட்டின் அருகே, மழைநீர் தேங்கும் நிலையில் உள்ள, தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், காய்ச்சல் பாதிப்புள்ளோர், டாக்டர்களின் அறிவுரைப்படியே சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் செய்வது ஆபத்தாகி விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X