'தாய்க்கும், மொழிக்கும் முக்கியத்துவம் வேண்டும்!'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தாய்க்கும், மொழிக்கும் முக்கியத்துவம் வேண்டும்!'

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'தாய்க்கும், மொழிக்கும் முக்கியத்துவம் வேண்டும்!'

சென்னை:''எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும், தாய்க்கும், தாய்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.
சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின் பவள விழா மற்றும் நிர்வாக கட்டடம், உள்விளையாட்டு பயிற்சி அரங்கம் அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. பவள விழாவை துவக்கி வைத்து, வெங்கையா நாயுடு பேசியதாவது:
தர்மசாஸ்திரத்தில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 'உலகத்தில், ஹிந்து பெண்கள் தான் அதிகம்; அவர்கள் தான் உலகின் அடையாளம்' என, சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். கல்வி என்பது, வேலைவாய்ப்பை பெறுவதற்கு மட்டுமல்ல. அனைவருக்கும் வேலை கிடைத்தால், சேவை யாருக்கும் கிடைக்காது.பெண்களுக்கு கல்வியறிவு மட்டுமின்றி, பல்வேறு திறமைகளையும், கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தற்போது அதிகரித்துள்ளன. அது, ஒழிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில், கல்வியுடன் விளையாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த நேரங்களில், உடற்கல்வி, யோகா போன்ற விஷயங்களை கட்டாயமாக்க வேண்டும்.
இளைஞர்கள், ஐந்து விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில், எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும், தாய் மற்றும் தந்தையையும், தாய்மொழியையும், எப்போதும் மறக்க கூடாது. பிறந்த ஊரையும், தாய்நாட்டையும் மறக்கக் கூடாது.மேலும், கல்வி கற்று கொடுத்த ஆசான்களை, ஒருபோதும் மறக்கக் கூடாது. 'கூகுளை' நாம் பயன்படுத்தலாம். ஆனால், குருவுக்கு மாற்றாக, கூகுள் வர முடியாது. வெளியில், எந்த மொழியையும் பேசுங்கள்; ஆனால், வீட்டில், தாய்மொழியில் மட்டும் பேசுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார், எத்திராஜ் கல்லுாரி நிர்வாகக் குழு தலைவர், முரளிதரன், நிதி அறங்காவலர், நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


'கமிஷனுக்கான துறை அல்ல!



'சென்னை மாநில கல்லுாரியின், 178ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. விழாவில், இளநிலையில், 700; முதுநிலையில், 310 மற்றும் எம்.பில்., 142 பேர் என, மொத்தம், 1,152 பேர் பட்டம் பெற்றனர். தங்கப்பதக்கம் பெற்ற, 39 பேருக்கு, வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார். பின், அவர் பேசியதாவது:தென் மாநிலங்களில், முதன்முதலாக துவங்கப்பட்ட கல்லுாரியில் படித்து, பட்டம் பெறுவது, மாணவர்களுக்கு பெருமை.
கல்வி என்பது, கமிஷனுக்கான துறை அல்ல. இது, எதிர்கால முன்னேற்ற திட்டங்களுக்கான துறை.பட்டம் பெற்ற மாணவர்கள், ஊழல், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் செயல்பட வேண்டும். கணக்கில் வராத கறுப்பு பணம் இருந்தால், ஒழுங்காக துாக்கம் வராது. எப்படிப்பட்ட மெத்தையில் படுத்தாலும், பணத்தை காப்பாற்ற வேண்டிய கவலையும், பயமும் இருக்கும்.
மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல், அவற்றை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும். எதிர்மறை கருத்துகளுக்கு, இடம் தரக் கூடாது. கோவில், மசூதி உட்பட, அவரவர் வழிபாட்டுக்கு ஏற்ற கோவில்களுக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X