நவராத்திரி நான்காம் நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி நான்காம் நாள்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நவராத்திரி நான்காம் நாள்

நவராத்திரியின் நான்காம் நாளான நாளை, மஹாலட்சுமியை வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும்.
மகாவிஷ்ணுவின் சக்தி வைஷ்ணவிதேவி. சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம், கருடன்.வைஷ்ணவி இந்த வேத மயமான வாகனத்தில் வரும் போது, வேதம் வகுத்தபடி அந்த காலத்தில் வாழப் போகிறோம் என்று அர்த்தம். தீமைகளை அவளே ஏற்றுக் கொண்டு நம்மை கட்டி காக்க போகிறாள் என்று அர்த்தம்.
வைஷ்ணவி என்பதற்கும், மகாவிஷ்ணு என்பதற்கும் நேரிடையான அர்த்தம் கொண்டால், எல்லா இடங்களிலும் நீக்கமற தானும் பரவி இருப்பவள் என்று அர்த்தம்.மதுரை மீனாட்சி அம்மன், ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி, கொடுக்க ஆரம்பித்தால், குறையேதும் இருக்காது.
அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான், நாம் பெற முடியும்.நான்காம் நாள் வழிபாடு முறை:அம்பாள்: வைஷ்ணவி; சங்கு - சக்கரம் வைத்திருப்பவள்; தீயவற்றை அழிப்பவள்.

வாகனம்: கருடன்சிறப்பு: மஹாவிஷ்ணுவின் அம்சம்லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபாட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் வைஷ்ணவியை வழிபட வேண்டும்நைவேத்தியம்: புளியோதரை, பானகம்மலர்கள்: அம்பிகைக்கு, கதிர் பச்சை மலர்களால், அதாவது மரிக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால், அர்ச்சனை செய்ய வேண்டும்தாம்பூலம் : 9 அல்லது 11 வகை கொடுக்கப்பட வேண்டும்.ராகம்: காம்போதிநான்காம் நாளான இன்று, அட்சதையால் படிக்கட்டு வடிவ கோலமிட, சிறப்பு பெறும். பிரசாதமாக, காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி சுண்டலும் வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X