எம்.ஜி.ஆர்., சிகிச்சை விபரம் கேட்கிறது கமிஷன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., சிகிச்சை விபரம் கேட்கிறது கமிஷன்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், எம்.ஜி.ஆர்., அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைக்காக, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டது யார் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1984ல், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை.
எனவே, 1984ல், எம்.ஜி.ஆரை., வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல, யார் அனுமதி அளித்தது, வெளிநாட்டில், அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விபரங்களை, அக்., 23க்குள் சமர்ப்பிக்கும்படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு, கமிஷன் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X