செய்திகள் சில வரிகளில் 2| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் 2

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 செய்திகள் சில வரிகளில் 2


நீர்நிலை ஆக்கிரமிப்பு அறிக்கை தர உத்தரவு



மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை குறித்து, கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.பொதுக்கூட்டம் நடத்த அனுமதிமதுரை: 'அ.ம.மு.க., பொதுக்கூட்டம் நடத்த, நிபந்தனைகளுக்கு உடபட்டு அனுமதிக்க வேண்டும்' என, மதுரை போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


ரூ.1.34 கோடி ஹவாலா பணம்



கூடலுார்: கர்நாடகாவில் இருந்து, கூடலுார் வழியாக, கேரளாவுக்கு கடத்த முயன்ற, 1.34 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை, கேரள போலீசார்பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.


'இருமுடி கட்ட மாட்டோம்'



ராமேஸ்வரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும், 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்ட மாட்டோம்' என, ராமேஸ்வரத்தில் நடந்த அய்யப்ப பக்த குருசாமிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கருணாஸ் வழக்கு: ஐகோர்ட் உத்தரவு



மதுரை: திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும்செவலில், 2017ல் ஒரு விழா நடந்தது. கருணாஸ் எம்.எல்.ஏ., வாகனம் தடையாக நின்றதாக கூறி, இரு தரப்பினருக்குள் வாக்குவாதம், தாக்குதல் நடந்தது.இந்த சம்பவம் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, இரு மாதங்களில்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, புளியங்குடி போலீசாருக்கு உத்தரவிட்டது.


சிலைகளின் தன்மை கோவிலில் ஆய்வு



தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தன்மை குறித்து, தொல்லியல் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து, புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் உள்ள, 19 சிலைகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வு, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை செய்தனர்.


கலிபோர்னியாவுக்கு கீழடி பொருட்கள்



மதுரை: மதுரை அருகே, கீழடி அகழாய்வு பொருட்களின் வயதை கண்டறிய, அமெரிக்கா கலிபோர்னியா மைய ஆய்விற்கு அனுப்ப, அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மாணவரை கடத்திய 4 பேர் கும்பல் கைது



கோவை: கோவையில், தனியார் கல்லுாரி மாணவரை காரில் கடத்தி தாக்கிய,19 - 30 வயதுள்ள நான்கு பேரை, சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்செய்யப்பட்டது. நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு



கூடலுார்: நீர்ப்பிடிப்பில், மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம், 134 அடியை எட்டியது. மழை இல்லாததால், நேற்று காலை நிலவரப்படி, 133.85 அடியாக குறைந்தது. மொத்த உயரம், 152 அடி. நீர்வரத்து வினாடிக்கு, 1,546 கன அடி, தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பு, 1,946 கன அடி, நீர் இருப்பு, 5,548 மில்லியன் கன அடியாகும்.


வீரப்பன் மனைவி எச்சரிக்கை



திருவண்ணாமலை: 'போலீசாரின் உளவாளி சண்முகபிரியா என்ற பெண், 'நான் தான், வீரப்பனை பிடித்து கொடுத்தேன். தமிழக அரசு, எனக்கு, 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது' என, கூறியுள்ளார். ''சண்முகபிரியாவுக்கு பரிசுத்தொகை வழங்கினால், சென்னை தலைமை செயலகம் முன் போராட்டம் நடத்துவேன்,'' என, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X