செய்தி சில வரிகளில்... - 10 செய்திகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்... - 10 செய்திகள்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'ஹெல்மெட்' அணிவதில் விலக்கு

புதுடில்லி: யூனியன் பிரதேசமான, சண்டிகரில், சீக்கிய மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, 'ஹெல்மெட்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, ஹெல்மெட் அணிவதில் இருந்து அவர்களுக்கு விலக்களித்து, மத்தியஉள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜி.டி.அகர்வால் காலமானார்
புதுடில்லி: கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி, சமூக ஆர்வலர், ஜி.டி.அகர்வால், 86, ஜூன், 22 முதல், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டம், 109 நாட்களை கடந்த நிலையில், சமீபத்தில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.
'ஜீன்ஸ்' அணிய சிறுமியருக்கு தடை
அலிராஜ்புர்: மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்புரில், மலி சமூகத்தின் பெண் தலைவர், மஞ்சுளா மலி நேற்று கூறியதாவது:எங்கள் சமூகத்தின் சார்பில், அலிராஜ்புரில், 'கர்பா' திட்டம் என்ற பெயரில், ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த நிகழ்ச்சியில், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியர், 'ஜீன்ஸ் பேன்ட்' அணிய தடை விதித்து உள்ளோம். பெண்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும், ஜீன்ஸ் பேன்ட் அணிய தடை விதிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மூவர் கொலை: மகன் கைது
புதுடில்லி: டில்லியில், கட்டுமான ஒப்பந்ததாரர் மிதிலேஷ், 45, அவரது மனைவி மற்றும் மகள் கொலையான விவகாரத்தில், மிதிலேஷின் மகன் சூரஜை, போலீசார் கைது செய்தனர். பட்டம் விட்டதற்காக தந்தை அடித்ததால், மூவரையும் கொலை செய்ததாக, போலீசாரிடம் சூரஜ் கூறினான்.
அரசியல் பயிற்சி மையம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், காசியாபாதில், நாட்டின் முதல், அரசியல் பயிற்சி மையம் துவங்க, முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார். இந்த மையத்தில், தற்போதுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் பயிற்சி அளிப்பர்.
துர்கா பூஜைக்கு நிதி: இன்று விசாரணை
புதுடில்லி: துர்கா பூஜை குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும், மேற்கு வங்க மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, இன்று விசாரிப்பதாக, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
ரூ.2.50 கோடி சுருட்டல்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள, கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலையின் வங்கிக் கணக்கில் இருந்து, போலி காசோலை மூலம், 2.50 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து, பல்கலை நிர்வாகம் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரயில் விபத்து: அதிகாரிகள், 'சஸ்பெண்ட்
'புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில், நேற்று முன்தினம், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், ஏழு பேர் உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில், தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சிக்னலை பராமரிக்கும் இரண்டு அதிகாரிகளை, ரயில்வே வாரியம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
இயக்குனர்களுக்கு, 'நோட்டீஸ்'
புதுடில்லி: பல்வேறு மோசடிகளை செய்த, பிரபல கட்டுமான நிறுவனமான, அமரபள்ளி குழுமத்தின் சொத்துக்களை முடக்கி, அதன் மூன்று இயக்குனர்களையும் கைது செய்யும்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவுகளை மீறிய, அமரபள்ளி குழுமத்தின் மூன்று இயக்குனர்களுக்கு, நீதிமன்ற அவமதிப்பு, 'நோட்டீஸ்' பிறப்பித்த உச்ச நீதிமன்றம், நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது.மேலும், இயக்குனர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து, இரண்டு வாரத்துக்கு, அவர்களை, ஒரு ஓட்டலில் காவல் வைக்கும்படியும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.'ஷூ' எறிந்தவருக்கு சிறை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில், 2017ல், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நடந்தபோது, அப்போதைய முதல்வரும், அகாலி தளம் தலைவருமான, பிரகாஷ் சிங் பாதல் மீது, அம்ரீக் சிங் என்பவன், 'ஷூ'வை, வீசி எறிந்தான். இந்த வழக்கில், இவனுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 சிங்கங்களுக்கு ஆபத்து
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில், தொற்று வைரஸ் பாதிப்பால், மூன்று வாரங்களில், 23 சிங்கங்கள் பலியாகின. மேலும், 21 சிங்கங்களுக்கு, ஆபத்தான இந்த வைரஸ் தொற்று இருப்பது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthi - Covai,இந்தியா
12-அக்-201810:06:21 IST Report Abuse
sakthi . அதென்ன சீக்கிய பெண்களுக்கு மட்டும் விதி விலக்கு ? அவங்க மண்டை கீழ விழுந்தா உடையாதா? எதுக்கு இந்த பாரபட்சம்? அப்படின்னா மத்த மதத்தை சேர்ந்த பெண்களுக்கு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X