செய்தி சில வரிகளில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

900 கைதிகள் விடுதலை
புதுடில்லி: மஹாத்மா காந்தியின், ௧௫௦வது பிறந்த ஆண்டு, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது. 'முதல் கட்டமாக, 900கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்' என, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
புதுடில்லி: விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டுயுடிங் பகுதியில், நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டதையடுத்து, பைலட், அவசரமாக தரையிறக்கினார்.
பயங்கரவாதி கைது
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களுரில், ௨௦௦௮ல், ஒன்பது இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், இருவர் இறந்தனர். இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சலீம், தலைமறைவாகிவிட்டான். அவனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணுாரில், நேற்று அவன் கைது செய்யப்பட்டான்.
'அக்பர் பதில் சொல்ல வேண்டும்'
புதுடில்லி: வெளியுறவுத்துறை இணையமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, எம்.ஜே.அக்பர், பத்திரிகையாளராக இருந்த போது, பாலியல் ரீதியாக, தனக்கு தொந்தரவு கொடுத்ததாக, பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி, மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ., ைவச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி கூறுகையில், ''பாலியல் புகார் குறித்து, அக்பர் தான் பதில் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில்,பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஊடகங்களுக்கு பாராட்டுகள்,'' என்றார். |
பா.ஜ.,வில் காங்., தலைவர் மனைவி
ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநில, காங்., மூத்த தலைவர் தாமோதர ராஜ நரசிம்மாவின் மனைவியும், சமூக சேவகியுமான பத்மினி ரெட்டி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X