செய்திகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செய்திகள்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கர்நாடக அமைச்சர் ராஜினாமா!

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கூட்டணி அரசு உள்ளது. சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிடப் போவதாக, பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த, கர்நாடக தொடக்கக் கல்வித் துறை அமைச்சர், என்.மகேஷ், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை, அவர் தெரிவிக்க வில்லை.
சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு!
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் நடத்தும், 10ம் வகுப்பு தேர்வில், எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் இரண்டையும் சேர்த்து, 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே, அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர். அடுத்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி?
திருவனந்தபுரம்: அகில பாரதிய ஹிந்து மகா சபையின், கேரள கிளை சார்பில், கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதுபோல, அனைத்து மசூதிகளிலும், பிரார்த்தனை செய்வதற்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒரு நாள் துாதரான மாணவியர்!
புதுடில்லி: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, 10 மாநிலங்களைச் சேர்ந்த, 17 மாணவியர், நம் நாட்டுக்கான பல்வேறு நாடுகளின் துாதர்களாக நேற்று செயல்பட்டனர். 'பான் இந்தியா' அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்புடன்,அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் துாதர்களாக, இந்த மாணவியர் நேற்று செயல்பட்டனர்.
இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிராக, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, நவ., 4ம் தேதியோடு, சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்த வேண்டும்' என, அமெரிக்கா கூறியிருந்தது.இந்நிலையில், ஈரானிடம் இருந்து, இந்தியா, சீனா போன்ற நாடுகள், தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், ''தொடர்ந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் கவனிக்கப்படும்,'' என்றார்.
மரண தண்டனை உறுதி
கொழும்பு: இலங்கையில், முன்னாள் அதிபரின் ஆலோசகர் பரத லட்சுமண பிரேமசந்திரா, 2011ல், கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய, முன்னாள், எம்.பி., துமிலா செல்வாவுக்கு, கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.அதை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த, அந்நாட்டு உச்ச நீதிமன்றம், செல்வாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X