இயற்கை பேரிடரால் இழப்பு எவ்வளவு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இயற்கை பேரிடரால் இழப்பு எவ்வளவு?

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

இயற்கை பேரிடரால் இழப்பு எவ்வளவு?
புதுடில்லி: நம் நாட்டில், 1998 - 2017 வரையிலான, 20 ஆண்டுகளில் ஏற்பட்ட, புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால், 5.91 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
'12௦ கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாளம்'
புதுடில்லி: டில்லியில் நேற்று, நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலை வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டை மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
வெளியானது, 'லாலு லீலா'
பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின், 'பினாமி' சொத்துக்கள் குறித்து, அம்மாநில துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷில் குமார் மோடி எழுதியுள்ள, 'லாலு லீலா' என்ற புத்தகம், நேற்று, பாட்னாவில் வெளியிடப்பட்டது. அதில், லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்த சொத்து விபரங்கள், பினாமிகள் குறித்து, விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இடை நில்லா விமான சேவை
மும்பை: உலகின், மிக நீண்ட துார, இடை நில்லா விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், மீண்டும் துவக்கியுள்ளது. இதன் மூலம், சிங்கப்பூரிலிருந்து, 15 ஆயிரத்து, 400 கி.மீ., துாரத்தில் உள்ள, அமெரிக்காவின் நியூயார்க் நகரை, 19 மணி நேரத்தில் சென்றடையலாம்.இந்த நிறுவனம், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இடை நில்லா விமான சேவையை வழங்கிய நிலையில், எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த சேவை, மீண்டும் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X