விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் : கைவிட்டது ரஷ்யா| Dinamalar

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் : கைவிட்டது ரஷ்யா

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Russia Soyuz Rocket, Russia, Soyuz rocket, ரஷ்யா, விண்வெளிக்கு மனிதர்கள்,  சோயுஸ் ராக்கெட், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்,  ரஷ்யா சோயுஸ் ராக்கெட் ,  பல்லாஸ்டிக் , பூஸ்டர் எந்திரம், சோயுஸ் ராக்கெட் கோளாறு, ராக்கெட், எந்திர கோளாறு,Humans into space,space for humans, International Space Research Center,  Pallastik, Booster machine, Soyuz rocket disaster, rocket, mechanical disorder,

மாஸ்கோ : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயுஸ் ராக்கெட்டில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 2 வீரர்களுடன், ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் புறப்பட்டது.
கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல்லாஸ்டிக் என்ற அவசர வாகனம் மூலம், விண்வெளி வீரர்கள் இருவரும் பத்திரமாக தரையிறங்கினர். இதையடுத்து, சோயுஸ் ராக்கெட் கோளாறு குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ரஷ்யா, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
12-அக்-201810:29:32 IST Report Abuse
இரா. பாலா செய்தியின் தலைப்பு குழப்புவதாக உள்ளது. பொதுவாக சர்வதேச விண்வெணி நிலையத்திற்கு சோயுஸ் விண்கலம் மூலம்தான் இதுவரை அடிக்கடி விஞ்ஞானிகள் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இம்முறை ஏதோ பழுதின் காரணமாய் தடைபட்டுள்ளது. விரைவில் அடுத்து க்ரூ மெம்பர்கள் செல்வார்கள் என நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201810:02:00 IST Report Abuse
Kasimani Baskaran ஆய்வுக்கூடத்தில் எனனோ ஓட்டை வேறு போட்டிருக்கிறான்.. இப்பொழுது ரஷ்ய ராக்கெட்டே வெடிக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X