தமிழகத்தின் கண்ணாடி

17 Oct 2018
2 hrs ago
1 / 40
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.
3 hrs ago
2 / 40
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க., வின் 47 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.
3 hrs ago
3 / 40
எழில்மிகு அணை: திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவூர் அணையின்  எழில்மிகு தோற்றம்.
3 hrs ago
4 / 40
ஆற்றில் இறங்கும் அழகர் : நவராத்திரியையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் மாதிரி வீட்டில் கொலுவாக அமைக்கபட்டுள்ளது. இடம் .உடுமலை
4 hrs ago
5 / 40
பஸ்கள் இயக்கம் : ஆயுதபூஜை, தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்.கோயம்பேடு.
6 hrs ago
6 / 40
திருஷ்டி கழிப்பு : புதுச்சேரியில் ஆயுதபூஜை விழாயொட்டி போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் சுந்தரி நந்தா டி.ஜி.பி., உட்பட போலீசாருக்கு கொண்டா வெங்கடேஸ்வராரவ் எஸ்.பி., பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தார்.
7 hrs ago
7 / 40
கைரேகை பதிவு : போலீஸ் பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கு திண்டுக்கல்லில் கைரேகை புதிவு நடந்தது.
7 hrs ago
8 / 40
எஸ்ஓஎஸ் செயலி : பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் நடந்த விழாவில் காவலன் எஸ்ஓஎஸ் செயலியின் அவசியம் குறித்து பெண்போலீசார் விளக்கி பேசினர்.
7 hrs ago
9 / 40
விழிப்புணர்வு நிகழ்ச்சி : சென்னை அப்பல்லோ குழந்தைகள் நல மருந்துவமனை சார்பில் உலக விபத்து மற்றும் உடல், தலைக்காய சிகிச்சை தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
7 hrs ago
10 / 40
சென்னை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்திடீர் பாதாள பள்ளம் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவரும் நிலையில் பஸ் போக்குவரத்தின் முக்கிய சாலையில் இந்த பள்ளம் ஏற்பட்டதால் இந்த பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
8 hrs ago
11 / 40
கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது
8 hrs ago
12 / 40
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மார்கெட்டில் பூக்களை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
8 hrs ago
13 / 40
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த அதிமுக 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமி கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் வரவேற்பளிக்க பேரணியாக வந்தனர்
8 hrs ago
14 / 40
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மார்கெட்டில் விற்பனைக்கு வந்த ரோஜாக்கள். 
9 hrs ago
15 / 40
மழையில் நனைந்த படியே சென்ற வாகன ஓட்டிகள். இடம்.சூளைமேடு
9 hrs ago
16 / 40
ஆயுத பூஜை விழாயொட்டி பூஜை பொருட்கள் விற்பனை நடக்கிறது. இடம்: அம்பேத்கர் சாலை, புதுச்சேரி
9 hrs ago
17 / 40
சென்னை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்திடீர் பாதாள பள்ளம் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவரும் நிலையில் பஸ் போக்குவரத்தின் முக்கிய சாலையில் இந்த பள்ளம் ஏற்பட்டதால் இந்த பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
9 hrs ago
18 / 40
ஆயுத பூஜை விழாயொட்டி பூஜை பொருட்கள் விற்பனை நடக்கிறது. இடம் அம்பேத்கர் சாலை,புதுச்சேரி
9 hrs ago
19 / 40
பழநி அருகே சின்னகலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்.
9 hrs ago
20 / 40
தேவையா இப்படி ஒரு விபரீத பயணம் . இடம்: கோவை பூசாரிபாளையம் ரோடு .
9 hrs ago
21 / 40
ஆயுத பூஜையையொட்டி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள வாழை கன்றுகள். இடம் .உடுமலை.
9 hrs ago
22 / 40
தினமலர் மாணவர் பதிப்பு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பர்ஸ்ட் பெஞ்ச் , கோ 4 குரு, இணைந்து நடத்திய வினாடி வினா (2018-2019) க்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் உள்ள சார் ராமசாமி முதலியார் மேல்நிலையப் பள்ளியில் நடந்தது. இதில் முதல் இடத்தை பெற்ற மாணவர்கள் ஜே.ஹரிகிருஷ்ணன் மற்றும் எஸ்.மணிகண்டனுக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே.ஆமோஸ் கேடயங்களை வழங்கினார்.
9 hrs ago
23 / 40
சென்னையில் பெய்த மழையில் குடையுடன் நனைந்த படியே சென்ற வாகன ஓட்டிகள். இடம்.சூளைமேடு
9 hrs ago
24 / 40
சென்னையில் பெய்த கொஞ்சம் மழைக்கே தேங்கிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகன ஓட்டிகள். இடம்.நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை
10 hrs ago
25 / 40
பழநி பகுதி மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் காந்தி ஜெயந்தி, ஆண்டு விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சி நடந்தது.
10 hrs ago
26 / 40
ராமநாதபுத்தில் பெய்த கன மழையில் குடையுடன் சென்ற பெண்கள்.
10 hrs ago
27 / 40
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் சார்பில் அரசாணை 62 அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
10 hrs ago
28 / 40
சிவகங்கையில் காவலர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
10 hrs ago
29 / 40
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள மலர்கள்.
10 hrs ago
30 / 40
கொளுத்திய வெயிலுக்கு சென்னையில் கொஞ்சம் மழை. இதற்கே தேங்கிய வெள்ளம். இடம்- வால்டாக்கீஸ் சாலை.
10 hrs ago
31 / 40
கொளுத்திய வெயிலுக்கு சென்னையில் கொஞ்சம் மழை. இடம்- எழும்பூர்.
10 hrs ago
32 / 40
சிவகங்கை தாலுகா அலுவலக சாலையில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
11 hrs ago
33 / 40
திருப்பூர் தனியார் வாகன ஓட்டுநர் உரிமையாளர்கள் மேயர் ஹால் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 hrs ago
34 / 40
விருதாச்சலம் - சேலம் ரயில்வே மார்க்கத்தில் மின்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
11 hrs ago
35 / 40
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் மேற்கூரை மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதோடு கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக பயணிகள் வேதனை படுகின்றனர்.
11 hrs ago
36 / 40
ஆயுத பூஜையையொட்டி விருத்தாசலம் பகுதியில். விற்பனைக்கு வந்துள்ள பூசணிக்காய்கள்.
11 hrs ago
37 / 40
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் மழையால் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டுவசதிவாரிய கட்டடம்.
11 hrs ago
38 / 40
வாகனத்துக்கு பூட்டு போட்ட காலம் போய் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் நாற்காலிக்கு பூட்டு போடும் காலமாகிவிட்டது. இந்தக் கூத்து விழுப்புரம் நகராட்சி அலுவலகம்.
11 hrs ago
39 / 40
ராமநாதபுரம் அருகே மும்முடிசாத்தான் கண்மாய்கரையை சரியாக பலப்படுத்ததால், மழையில் கரைந்து உடையும் நிலையுள்ளது.
11 hrs ago
40 / 40
ராமநாதபுரம் அருகே நயினார்கோயில் பகுதி நெடுங்குறிச்சியில் மழையால் நிறைந்துள்ள பண்ணைகுட்டைகள்.