பொதுஆல்பம்:

12-அக்-2018
1 / 10
சென்னயில் நடந்த தமிழ் வர்த்தக சபையின் பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு தொழில் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கினார் ( இடமிருந்து வலம் ) தமிழக மீன்வளம் , பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் , தொழிற்துறை அமைச்சர் சம்பத்
2 / 10
திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று மாலை நடந்த ஊஞ்சல் சேவை மற்றும் முதல் நாள் அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.
3 / 10
தித்லி் புயல் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் வீசிய போது பலத்த மழை கொட்டியது அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு ஜோடி இடம்: கோபால்பூர்.
4 / 10
தித்லி புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூரை தாக்கிய போது கொட்டித் தீர்த்த கனமழை.
5 / 10
தித்லி புயல் காற்றின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஒருவர் குடையை பக்கவாட்டில் பிடித்து செல்கிறார் இடம்: கோபால்பூர், ஒடிசா
6 / 10
தித்லி புயல் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தை கடந்த போது வீசிய பலத்த காற்று.
7 / 10
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் துர்கா பூஜையின் போது துர்கா தேவியை வணங்கிய மூதாட்டி.
8 / 10
புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நவராத்தி இரண்டாம் நாள் விழாவில் நாட்டிய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
9 / 10
நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான ேநற்று மதுரை மீனாட்சி அம்மன் மேருவை செண்டால் அடித்தல் அலங்காரத்தில் காட்சியாரித்தார்.
10 / 10
தாமிரபரணி மகாபுஷ்கர விழா, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், நேற்று கோலாகலமாக துவங்கியது. நெல்லை மாவட்ட ம், மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணியின ஆதிவாசியினர், தாமிரபரணி துவங்கும் இடத்தில் சேகரிக்கப்பட்ட புனித நீரை , பாபநாசத்திற்கு, யானை மீது எடுத்து வந்தனர்.