R KUMAR : கருத்துக்கள் ( 99 )
R KUMAR
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2018
எக்ஸ்குளுசிவ் மின் இழப்பை அறிய, மோடம் 521 நகரங்களில் பொருத்த முடிவு
அரசியல் காட்சிகள் திருட்டுத்தனமாக மின் வசதியை திருடுவதை தடுத்தாலே, பொது மக்களுக்கு தடையில்லா மின்சார வசதியை அளிக்கலாம்.   00:57:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் நான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும் திக்விஜய் சிங் திக்
இவரென்ன, யார் காங்கிரஸ்க்கு பிரச்சாரம் செய்தலும் காங்கிரஸ் தோற்பதென்னவோ உறுதி அப்ப இவர் காங்கிரஸ் கட்சிக்காக தைரியமாக பிரச்சாரம் செய்யலாம். காங்கிரஸ் தோற்ற பின்னர், நான் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் தோற்கும் என்று நான் அப்போதே கூறினேன் என்று கூறி சமாளித்துக் கொள்ளலாம்.   00:52:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2018
கோர்ட் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து வியாபாரிகள் போராட்டம், ஏனென்றால் அவர்கள் நாற்பது சதவீதம் இலாபம் வைத்து விற்பார்கள், ஆனால் ஆன்லைனில் பத்து சதவீதம் இலாபத்தில் விற்பதால் தங்கள் வியாபாரம் பாதிக்கும் என்று சொல்லாமல் வேறு காரணம் குறிப்பிட்டு சுயலாபத்திற்காக போராடுகிறார்கள். சிவகாசி பட்டாசு வியாபாரிகள் தொலைபேசி மூலம் அல்லது ஈ-மெயில் மூலம் ஆர்டர் எடுக்கிறார்கள். ஆன்லைனிலும் ஈ-மெயில் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆர்டர் எடுக்கிறார்கள். அதை விற்பனை செய்யும் இடத்திற்கு அனுப்புகிறார்கள். சிவகாசி பட்டாசு வியாபாரிகள் நூற்றுஐம்பது சதவீதம் அல்லது இருநூறு சதவீதம் இலாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். இது என்னுடைய அனுபவத்தில் தெரிவிக்கிறேன். ஆனால் ஆன்லைனில் விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால், சிவகாசி பட்டாசு வியாபாரிகளின் விற்பனை குறைகிறது என்பதே உண்மை. மற்றபடி பாதுகாப்பு காரணமாகவே நடவடிக்கை என்பதெல்லாம் சும்மா கூறும் காரணமாகும். இவர்களும் இலாபத்தை குறைத்துக்கொண்டு விற்பனை செய்தால் வியாபாரம் நன்கு நடக்கும். ஆனால் செய்யமாட்டார்கள். நமது ஊர் மக்கள் வாழவேண்டும் என்றும், கைத்தொழிலை ஆதரிக்கவேண்டும் என்றும் சம்பந்தமில்லாத காரணங்களை கூறுவார்கள். ஆன்லைனில் விற்பனையாகும் பட்டாசுகளையும் கைத்தொழில் மூலம்தான் செய்கிறார்கள். இயந்திரங்கள் செய்வதில்லை. இவர்கள் கூறும் காரணங்களின் அடிப்படையில், ஒவ்வொரு விஷயத்திலும் கோர்ட்-டுகள் தலையிட்டு தடையுத்தரவு பிறப்பித்தால், திருட்டுத்தனமாக வியாபாரம் கட்டாயம் பெருகும். அண்டை மாநிலங்களில் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை வரவழைத்து, தமிழகத்தில் வியாபாரம் செய்வது கண்கூடு.   00:44:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் காவி வேஷ்டியில் ராகுல் பக்தி பரவசம்
காவி கட்சியுடன் கூட்டு சேர்வது பாவ காரியம் அல்ல என்றுகூறி தான் தி.மு.க பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. லாபம் கிடைக்கவில்லை என்றவுடன், தற்போது எதிர்க்கிறது. அரசியலில் எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்று கூறிக்கொண்டு எதையும் செய்வார்கள். ஏனென்றால் மக்களையெல்லாம், 'சோத்தால் அடித்த பிண்டங்கள்' என்று கருதும் வரை இவர்கள் எதையும் செய்வார்கள்.   20:49:58 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் கடற்கரையில், கண்ணாமூச்சி ரே ரே... கணவனுக்கு, ஸ்கெட்ச் போட்ட மனைவி கைது
பெண்ணுரிமை, மற்றும் சுப்ரிம் கோர்ட் ஆணைகள், எல்லாம் இது போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துவிட்டன. இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.   20:41:56 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் லஞ்சம் கொடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசு பணியில் லஞ்சம் வாங்கி பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டு, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு விசாரணை அலுவலரால் அரசுக்கு இறுதி அறிக்கை அளித்தபின்னர், அந்த அறிக்கையை மாற்றி பதவி உயர்வு பெற்ற நிகழ்வுகள் எல்லாம் பல்வேறு அரசு துறைகளில் ஆதாரமாக உள்ளன. அப்புறம் லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாட்டை குறைகூற முடியாது.   00:04:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் லஞ்சம் கொடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சுமார் 20 ஆண்டுகள் முன்பு, அரசு பணியிலிருந்த நண்பர் ஒருவர் பட்டா வேண்டி விண்ணப்பம் அளித்தார். கிராம நிர்வாக அலுவலர் ரூபாய் 700 கொடுக்குமாறு கேட்டார். எனவே மற்றொரு கிராம நிர்வாக அலுவலரின் ஆலோசனையை கேட்டார். இந்த விஷயத்தில், தான் குறுக்கிட்டால் அலுவலக ரீதியான நட்புணர்வு பாதிக்கப்படும் என்றும், இடத்தை அளக்க சர்வேயர் ஒருநாள் வருவார் என்றும் அவருக்கு ஆட்டோ கூலி செலவு , அவருடன் வரும் மற்றொரு பணியாளருக்கு செலவு, அன்றையதினம் விண்ணப்பம் அளிக்கும் நண்பர் விடுப்பு எடுத்து வரவேண்டும், மற்றோரு நாள் வருவாய் ஆய்வாளர் நடத்தும் விசாரணையின் போது உடனிருந்து ஆவணங்களை விடுப்பு எடுத்து வந்து அளித்தல், பின்னர் வட்டாச்சியர் மேற்கொள்ளும் விசாரணையின்போதும் ஆவணங்களை அளிக்க வேண்டும், இதற்கும் விடுப்பு எடுத்து வரவேண்டும், இதற்கெல்லாம் சம்மதித்தால் லஞ்சம் கொடுக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினார். இதைவிட விண்ணப்பம் அளிப்பவர் விடுப்பு எடுத்துக்கொண்டு வட்டாச்சியர் அலுவலகம் செல்லும்போது விசாரணை நிர்வாக காரணங்களால் நடக்கவில்லை என்றால் அன்றையதினம் விடுப்பும் தேவையற்றதாகி விடும் என்றும், எப்படி இருந்தாலும் மூன்று மாதம் ஆகும் என்று கூறினார். எல்லாவற்றையும் கணக்கிட்ட அரசு அலுவலக நண்பர் கிராம நிர்வாக அலுவலர் கேட்ட ரூபாய் எழுநூறை கொடுத்துவிட்டு வந்தார். எந்த ஆவணங்களும் அளிக்கவில்லை. சுமார் முப்பது நாட்கள் கழித்து, பட்டா தயாராக உள்ளது என்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. லஞ்சம் கொடுத்ததால், அவருக்கும் அலைச்சல் இல்லை, விடுப்பும் எடுக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை, விரைவிலும் கிடைத்துவிட்டது. எனவே லஞ்சம் என்பது சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுவிட்டது. கொடுப்பது தப்புதான்: வாங்குவதும் தவறுதான். ஆனால் நாட்டு நடப்பை உத்தேசித்து கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளது. இதை நியாய படுத்த விரும்பவில்லை.   20:40:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு
வேளாண்மைக்கு அதிக அளவில் பூமிக்கடியிலிருந்து தண்ணீர் எடுப்பதை அரசு வரன்முறைப்படுத்தவிட்டால் விரைவில் தமிழகம் வறண்ட பிரதேசமாக மாறும்.   08:03:49 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் விஸ்வரூபம்! நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் குளறுபடி அதிக விலைக்கு வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு
எப்படி இருந்தாலும் குற்றம் நிரூபணமானால், தக்க நடவடிக்கை எடுக்க, பொது விசாரணை குழு அரசுக்குதான் பரிந்துரைப்பார்கள். அப்போது நடவடிக்கை எடுக்கும் முடிவு அரசின் கையில்தான் இருக்கும் அப்போது அந்த நடவடிக்கையின் தன்மையை யாரும் கேட்க இயலாது.   07:59:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் லஞ்சம் கொடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பிறப்பு சான்று பதிவு செய்து சான்றிதழ் பெறவே, லஞ்சம் கொடுக்கவேண்டும். அதே போன்று இறப்பு ச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்று போன்ற அனைத்திற்கும் லஞ்சம் இல்லையென்றால் கிடைக்காது. இவ்விவரங்களை அதற்கான தரகர்களை விசாரித்தால் நன்றாக அறியலாம். லஞ்சம் கொடுக்கவில்லையென்றால் அரசு அலுவலகங்களில், எந்த காரியமும் நடக்காது.   20:44:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X